என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண்களிடம் பணம் பறிப்பு
நீங்கள் தேடியது "பெண்களிடம் பணம் பறிப்பு"
போலி பேஸ்புக் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கோவை:
உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திர வர்மன் (30). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த அவர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக பிரபல இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் தொடங்கினார்.
அவரது இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகான புகைப்படங்களை போலி முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
இதற்கு நிறைய இளம் பெண்களிடம் இருந்து லைக் கிடைத்தது. அவர்களிடம் முகநூல் நண்பராக பழக வருமாறு மகேந்திர வர்மன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பார்த்த இளம்பெண்கள் அர்மான் மாலிக் தான் அழைப்பு விடுக்கிறார் என கருதி முகநூல் நண்பர்களானார்கள்.
பின்னர் அந்த இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற்று மகேந்திர வர்மன் வாட்ஸ்அப் மூலம் பழக தொடங்கினார். அப்போது இந்தி படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்.
மேலும் தங்களது படத்தை அனுப்புமாறும் கூறினார். சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிய இளம்பெண்கள் தங்களது அழகிய புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.
அதனை ஆபாசமாக மார்பிங் செய்து இளம்பெண்களை மகேந்திர வர்மன் மிரட்ட தொடங்கினார். குறிப்பிட்ட ஒரு தொகையை கேட்டு அதனை தராவிட்டால் ஆபாசமாக சித்தரித்த படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் பலர் மகேந்திர வர்மன் கேட்ட தொகையை அவர் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினர்.
இது போன்று 15-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் மகேந்திர வர்மன் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் மகேந்திர வர்மன் பணம் கேட்டுள்ளார். பணத்தை தராவிட்டால் மார்பிங் செய்த படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து மகேந்திர வர்மனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். அந்த இளம்பெண்ணை மகேந்திர வர்மனிடம் நைசாக பேசி பணம் தருவதாக கூறி கோவைக்கு வருமாறு அழைப்பு விடுமாறு போலீசார் கூறினார்கள்.
அதன் படி அந்த இளம்பெண்ணும் பேசி மகேந்திர வர்மனை கோவை லட்சுமி மில் சிக்னல் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இளம்பெண் அழைப்பு ஏற்று கோவை வந்த மகேந்திர வர்மனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா தேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கைதான மகேந்திர வர்மனிடம் கையடக்க கணினி ( டேப் )இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்த போது அவருடன் தொடர்பு வைத்து இருந்த இளம்பெண்களின் விவரங்கள் இருந்தது.
மேலும் அழகான பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து வைக்கப்பட்டு இருந்த புகைப்படமும் இருந்தது. அதில் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படம் இடம் பெற்றிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திர வர்மன் பெண்களிடம் பேசி பணத்தை பறித்தது தெரிய வந்தது.
கையடக்க கணினியை தடய அறிவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் போலீசாரிடம் கூறியதாவது-
ஆசிரியர் பயிற்சி படித்து முடித்து வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்து வந்தேன். அப்போது தான் இணைய தளம் வழியாக இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் குறித்து தெரிந்து கொண்டேன்.
அவரது பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என திட்டம் தீட்டி அதன் படி முகநூல் பதிவு தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்.
இந்த முகநூலில் இணைந்த பெண்களிடம் நான் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அவர்களை எனது வலையில் விழ வைத்தேன்.
அழகான பெண்கள் புகைப்படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் பறித்தேன். 15 -க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ. 50 லட்சம் வரை பறித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் மீது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, கொலை மிரட்டல், பெண்களை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

×

X